கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் (KMUT) விண்ணப்பங்களின் நிலையை அறிவது எப்படி?
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் தகுதியுள்ள பயனாளிகளின் வங்கிக்கணக்குக்கு ரூ.1,000 அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்களின் நிலைகுறித்தகுறுஞ்செய்தி, விண்ணப்பதாரர்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கு தற்போது அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
மேலும் தமிழக முதல்வரின் உதவி மைய எண் 1100-ஐ தொடர்பு கொண்டும் விண்ணப்பத்தின் நிலையை தெரிந்து கொள்ளலாம். அனைத்து இ-சேவை மையங்களிலும் தங்களின் விண்ணப்பத்தின் நிலைகுறித்து தெரிந்து கொள்ளலாம்.
மேலும் 'kmut.tn.gov.in/login.html' என்ற இணையதள முகவரி யில் தங்கள் ஆதார் எண்ணை உள்ளீடு செய்து விண்ணப்பத்தின் நிலையை தெரிந்து கொள்ளலாம். ஆட்சியர் அலுவலகம், அனைத்து வருவாய் கோட்டாட்சியர் அலுவல கம், அனைத்து வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் இத்திட்டத் துக்கு பிரத்யேகமாக செயல்பட்டு வரும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட உதவி மையத்தை அணுகி விண்ணப்பத்தின் நிலையினை தெரிந்து கொள்ளலாம்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் (KMUT) விண்ணப்பங்களின் நிலையை அறிய கீழே உள்ள Link Click செய்யவும் .
விண்ணப்ப நிலை அறிய : Click Here
மாதிரி படம்



